ஓசூர் தாலுகா அலுவலக சாலையில்போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


ஓசூர் தாலுகா அலுவலக சாலையில்போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் தாலுகா அலுவலக சாலை, உழவர் சந்தை சாலை மற்றும் ரெயில் நிலைய சாலை போக்குவரத்து நிறைந்த பகுதிகளாகும். நேற்று அந்த பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட கார், வேன், ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கி, 1 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் பணிக்கு செல்பவர்கள், அவசர வேலையாக செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர். இதையடுத்து, அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.


Next Story