கடுவையாற்றில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி


கடுவையாற்றில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி
x

கடுவையாற்றில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே தேவூரில் பழுதடைந்த பாலம் இடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் கடுவையாற்றில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பாலம் இடிக்கப்பட்டது

கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சி கடுவையாற்றின் குறுக்கே போக்குவரத்து பாலம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக திருத்துறைப்பூண்டி, திருக்குவளை, எட்டுக்குடி மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், மோட்டார் சைக்கிள், 4 சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்களில் மாணவ - மாணவிகள் தினமும் சென்று வந்தனர். இந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் பொதுப்பணித்துறை மூலம் கடந்த மார்ச் 29-ந்தேதி முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் 5 மாதங்கள் ஆகியும் புதிய பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

தற்காலிக பாலம்

இதனால் கீழ்வேளூரில் இருந்து பஸ், கனரக வாகனங்கள் ராதாமங்கலம், இருக்கை கிராமம் வழியாக மாற்று பாதையில் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து இடிக்கப்பட்ட பாலத்தின் அருகே கடுவையாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வர முடியும். 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இருக்கை, ராதாமங்கலம் ஆகிய ஊர்கள் வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story