ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி


ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
x

ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

நாகப்பட்டினம்

சிக்கல்-பாலக்குறிச்சி சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பாலம் கட்டும் பணி

நாகை ஒன்றியம் சிக்கல் ஊராட்சி மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து பாலக்குறிச்சி வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சிக்கல் விதைப்பண்ணை அருகே செல்லும் தொம்பை வாய்க்கால் பகுதியில் சாலையின் குறுக்கே சிறிய பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடந்து வந்தது. தற்போது அந்த பணி முடிவடைந்துவிட்டது.

அந்த பாலம் அருகே உள்ள வளைவில், பாலப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஜல்லிக்கற்களை இரண்டு பக்கமும் கொட்டி உள்ளனர். இந்த இடத்தை கடந்து தான் தினமும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களும் சென்று வருகின்றனர்.

கீழே விழுந்து காயம்

அந்த இடத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அங்கு இருள்சூழ்ந்து காணப்படும். இதனால் தினமும் அவ்வழியாக செல்லும் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

சிக்கலில் இருந்து பாலக்குறிச்சி வரை 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்பவர்கள் இந்த இடத்தை கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story