நெடுஞ்சாலை பைப்லைனுக்கு தோண்டிய பள்ளம் சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் அவதி
சோளிங்கர் நகராட்சியில் நெடுஞ்சாலை பைப்லைனுக்கு தோண்டிய பள்ளம் சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் அவதி
ராணிப்பேட்டை
சோளிங்கர்
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட வாலாஜா சாலை கருமாரியம்மன் கூட்டு சாலை பகுதியில் நெடுஞ்சாலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி குடிநீர் பைப் லைன் உடைந்து தண்ணீர் வெளியேறியது.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலை பள்ளம் எடுத்து பைப் லைன் சீரமைத்தது.
ஆனால் நெடுஞ்சாலையில் எடுத்த பள்ளத்தில் மண் நிரப்பியது. கனரக வாகனங்கள் செல்லும்போது நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டது.
இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம், சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் அந்த பள்ளத்தை முறையாக சிமெண்டு மற்றும் தார் மூலம் சரிசெய்து விபத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story