பாலப்பணியில் ஜல்லி துகள்கள் கீழே விழுவதால் வாகன ஓட்டிகள் அவதி


பாலப்பணியில் ஜல்லி துகள்கள் கீழே விழுவதால் வாகன ஓட்டிகள் அவதி
x

திருெவறும்பூர் பகுதியில் பாலப்பணியில் ஜல்லி துகள்கள் கீழே விழுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

திருச்சி

திருெவறும்பூர் பகுதியில் பாலப்பணியில் ஜல்லி துகள்கள் கீழே விழுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

பாலப்பணி

திருவெறும்பூர் பகுதியில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கணேசா ரவுண்டானா அருகே பாய்லர் ஆலை பஸ் நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் போலீஸ் நிலைய எல்லை வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாலம் கட்டும் பணி நடைபெறும் கணேசா ரவுண்டானா வழியாக வரும் பாய்லர் ஆலை ஊழியர்கள் மற்றும் பாய்லர் ஆலை வளாகத்திற்குள் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், துவாக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், தொழில் முனைவோர் இந்த சாலையை கடந்துதான் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் இந்த பாலம் அமைக்கும் பணிக்காக, மேலே பொக்லைன் எந்திரம் மூலம் ஜல்லி மற்றும் மணல் கொட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஜல்லிகள் மற்றும் மணல் கொட்டப்படும்போது புழுதி கிளம்புவதோடு, ஜல்லி துகள்கள் சிதறி கீழே விழுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் அவை விழுவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சிறிது நேரம் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது.

கோரிக்கை

எனவே இப்பகுதியில் ஜல்லிகள் மற்றும் மணல் கொட்டப்படும் சமயங்களில், தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் அல்லது அந்தநேரத்தில் வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும், என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story