கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
x

ஏலகிரி மலையில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நேற்று கடுமையான பனிப் பொழிவு காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகல் அவதிக்குள்ளானார்கள். இதனால் வாகனஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

மாலைவரை பனிப்பொழிவு இருந்ததால் பொதுமக்களும் சிரமப்பட்டனர்.


Next Story