கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
x

வேலூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

வேலூர்

வடகிழக்கு பருவமழையால் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மற்றும் பலத்தமழை பெய்தது. அதன்காரணமாக பனிப்பொழிவு குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மழை பெய்யவில்லை. அதனால் அதிகாலையில் வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. புகை போன்று பனிமூட்டம் காணப்பட்டது. அதனால் சாலைகளில் எதிரே சிறிதுதூரத்தில் வரும் வாகனங்கள் தெரியாதநிலை காணப்பட்டது. அதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயங்கினர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிகளவு பனிமூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சென்றனர். பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையால் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றன. பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.


Next Story