திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி காரணமாக திருத்துறைப்பூண்டியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புறவழிச்சாலை

திருத்துறைப்பூண்டியில் நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகியவற்றுக்கு செல்லும் சாலை பகுதிகளுக்கு புறவழிச்சாலை உள்ளது. திருவாரூர், மன்னார்குடி செல்லும் சாலை பகுதிகளுக்கு புறவழிச்சாலை கிடையாது. இதனால் வேதாரண்யத்தில் இருந்து வரும் லாரிகள், பஸ்கள் இதர பணிகளுக்காக தஞ்சை, திருச்சி செல்ல திருத்துறைப்பூண்டி நகரத்தின் வழியாக மட்டுமே செல்ல முடியும்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ெரயில்வே கேட் அருகில் கடந்த 20 நாட்களாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலை காசு கடை தெருவிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, தஞ்சை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் முத்துப்பேட்டை செல்லும் சாலை காசுகடை தெருவில் அந்த பணிகள் நடைபெறுவதால் அந்தப் பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

இதனால் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்திருக்கும் அவலம் உள்ளது.

ேமலும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் போக்குவரத்து ெநரிசலில் சிக்கி அங்கிருந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருத்துறைப்பூண்டியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story