மவுண்ட் பார்க் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மவுண்ட் பார்க் பப்ளிக் பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் மணிமாறன் பாராட்டினார்.
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் உள்ள மவுண்ட் பார்க் பப்ளிக் (சி.பி.எஸ்.இ.) பள்ளி சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 12-ம் வகுப்பு தேர்வில் மாணவன் ராஜகணபதி 500-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடத்தையும், மாணவி பவானி 469 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடத்தையும் பிடித்தனர். இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் மாணவன் சிவனருட்செழியன் 500-க்கு 486 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், மாணவி வெண்ணிலா 477 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடத்தையும் பிடித்தனர். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 2 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை மவுண்ட் பார்க் பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் மணிமாறன், தலைவர் டாக்டர் அரவிந்தன், மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கலைச்செல்வி, மவுண்ட் பார்க் பப்ளிக் பள்ளி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் ரஞ்சிதா ஆகியோர் பாராட்டினார்கள்.