மனைவி இறந்த துக்கத்தில்மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலை
ஒட்டபிடாரம் அருகேமனைவி இறந்த துக்கத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலையை சேர்ந்த ராமர் மகன் எட்டப்பன் (வயது 40). மாற்றுத்திறனாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் சிறிது மாதங்களில் இறந்துவிட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வந்தார். மனைவி இறந்த துக்கத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காணப்பட்ட எட்டப்பன் நேற்று வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story