சாப்டூர் வனப்பகுதி கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை, செந்நாய்கள் நடமாட்டம் பதிவு
சாப்டூர் வனப்பகுதி கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை, செந்நாய்கள் நடமாட்டம் பதிவாகி இருந்தது.
பேரையூர்
சாப்டூர் வனப்பகுதி கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை, செந்நாய்கள் நடமாட்டம் பதிவாகி இருந்தது.
வனப்பகுதி
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர் வனப்பகுதி 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வனப்பகுதி கடந்த வருடம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்த வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள், மான்கள், காட்டுமாடுகள், செந்நாய்கள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளது.
இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள் உள்பட வன விலங்குகள் நடமாட்டத்தை துல்லியமாக அறியவும், அவற்றின் வாழ்வியலை அறியவும், வனப்பகுதியில் 55 இடங்களில் சுமார் 110 தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மரங்களில் கடந்த மே மாதம் பொருத்தப்பட்டது.
சிறுத்தை நடமாட்டம்
தற்போது தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை முதல் கட்டமாக எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. கடவு, முடங்கிகாடு, பெரியபசுக்கடை, ஆகிய இடங்களில் பொருத்தப்பட்ட தானியங்கி கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தையின் நடமாட்டம், செந்நாய் கூட்டம், மயில், பன்றி கூட்டம் ஆகியவை பதிவானது தெரியவந்தது.