பா.ஜனதா எம்.பி.யை கைது செய்ய வேண்டும்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் புறநகர் மாவட்டக்குழு இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் வந்தனர். இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியான பாதிப்புக்கு நியாயம் கேட்டும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பா.ஜனதா எம்.பி., பிரிஜ்பூசன் சரண்சிங்கை கைது செய்து, எம்.பி. பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தியும் குற்றவாளியை கைது செய் என்று வாசகம் எழுதிய வேட்டி, சேலைகளை பிரதமருக்கு அனுப்பி வைக்க வேட்டி, சேலையுடன் கொண்ட பார்சலை கொண்டு வந்தனர். பின்னர் அந்த பார்சலை கலெக்டரிடம் கொடுத்து பிரதமருக்கு அனுப்பி வைக்கக்கோரினார்கள்.
இதில் இந்திய தேசிய சம்மேளன அமைப்பின் மாவட்ட தலைவர் சித்ரா, துணைத்தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் நதியா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.