கோத்தகிரி - ஊட்டி சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த எம்.பி.


கோத்தகிரி - ஊட்டி சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த எம்.பி.
x

கோத்தகிரி - ஊட்டி சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த எம்.பி.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு ஊட்டிக்கு வந்த கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் பேரார் கிராமத்தில் இருந்து கட்டபெட்டு செல்லும் போது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்தில் சிக்கியது. அப்போது கோத்தகிரி கைகாட்டி பகுதியில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு நீலகிரி எம்.பி. ஆ.ராசா வந்து கொண்டிருந்தார். விபத்து ஏற்பட்டதை கண்ட அவர் உடனடியாக தனது காரை நிறுத்தி, விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாக மீட்டு, தன்னுடன் வந்த மற்றொரு காரில் ஏற்றி ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு படுகாயம் அடைந்த பயணிகளுக்கு தீவிர சிகிச்சை வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டார். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல் போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story