உடுமலை -பொள்ளாச்சி சாலையோரம் குவியலயாக கிடக்கும் மண்
உடுமலை -பொள்ளாச்சி சாலையோரம் குவியலயாக கிடக்கும் மண்
உடுமலை
உடுமலையில் போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி சாலையில் கழிவுமண் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சாலையில் கழிவு மண்
உடுமலை நகராட்சி பகுதியில் போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் மின்மயானத்தை அடுத்துள்ள பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரம் கெடுகிறது என்பதால், அந்த இடத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என்றும், குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் மூட்டைகளில் குப்பைகளை கொண்டு வந்து, அங்கு போட்டுவிட்டு செல்கின்றனர்.
வாகன ஓட்டுனர்கள் அவதி
இந்த நிலையில் நகராட்சி பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரி எடுக்கப்படும் கழிவுமண், பொள்ளாச்சி சாலையில் நகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுகுவியல், குவியலாக குவிந்து கிடக்கிறது. அத்துடன் சாலையிலும் சிதறிகிடக்கிறது. சாலையில்,
கழிவுமண் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.அதனால் சாலையில் பரவி கிடக்கும் கழிவு மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என்றுவாகனஓட்டுனர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.