முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்


முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்
x

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்துமாலை அம்மன்

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் தீர்த்தவாரியும், அம்மன் சப்பர பவனி வருதல், கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முதல் நாள் திருநாள் ஹரிராம் சேட் நற்பணி மன்றம் மற்றும் நாடார் இளைஞர் அணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அம்மன் ரத பவனி

11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, பகலில் அம்மனுக்கு பூஜைகள், மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து முக்கூடல் நகரை சுற்றி தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் ரத பவனியும், இரவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவில் 8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். 9-ம் நாள் அன்று இரவு அம்மன் சப்பர பவனி உடன் கலை நிகழ்ச்சிகள், 10-ம் திருநாள் அன்று தாமிரபரனி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், 11-ம் நாள் தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எல்.வேல்சாமி, செயலாளர் எஸ்.சந்திரன், துணை தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்தரசன் மற்றும் முக்கூடல் இந்து நாடார்கள் செய்து உள்ளனர்


Next Story