மழை வேண்டி முளைப்பாரி திருவிழா


மழை வேண்டி முளைப்பாரி திருவிழா
x

மழை வேண்டி முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம்

நயினார்கோவில்

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே நகரமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு முளைப்பாரி திருவிழா கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து மந்தையில் இருந்து முளைப்பாரி ஓடுகள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக முத்து மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மழை வேண்டி நடத்தப்பட்ட முளைப்பாரி திருவிழா பாரம்பரியமிக்க ஆண்கள் ஒயிலாட்டத்துடன் நடைபெற்றது. பின்னர் முளைப்பாரி நகரமங்கலம் கண்மாயில் கரைக்கப்பட்டது. முளைப்பாரி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நகரமங்கலம் கிராமத்தினர் செய்திருந்தனர்.


Next Story