முளைப்பாரி ஊர்வலம்


முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே காளி அம்மன் கோவில் புரட்டாசி மாத பொங்கல் விழாவைெயாட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் கிராமத்தில் காளி அம்மன் கோவில் புரட்டாசி மாத பொங்கல் விழாவைெயாட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெண்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதையொட்டி குத்துவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல், அக்கினிசட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

முளைப்பாரியை பெண்கள் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று காத்தாகுளம் அம்மன் கோவில் அருகே உள்ள ஊருணியில் கரைத்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.


Next Story