முளைப்பாரி ஊர்வலம்
சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். கீழக்கரை டி.எஸ்.பி. சுபாஷ், கடலாடி தாசில்தார் முருகவேல் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, எஸ். ஐ. சால்மோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் அமைந்திருக்கும் பாலமுருகன் கோவிலில் இருந்து சாயல்குடி தேவர் சிலை வரை பால்குடம் எடுத்துப் பெண்கள் வந்தனர். அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தினமும் 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. அன்னதானம். நடைபெற்றது. நேற்று பெண்கள் சாயல்குடி தேவர் சிலையிலிருந்து முளைப்பாரி எடுத்து சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாயல்குடி முக்குலத்தோர் உறவின்முறை இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story