காளியம்மன் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம்
கழுகுமலை அருகே கொக்குகுளம காளியம்மன் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கொக்குகுளம் காளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று காலை 10 மணிக்கு கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சந்தன மாரியம்மன், பாலவிநாயகர், காந்தாரியம்யன், ஆஞ்சநேயர், இருளப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை நடந்தது. ஊர் நாட்டாமை ஜெயக்குமார், கோவில் தர்மகர்த்தா சீனிப்பாண்டியன், பசும்பொன் பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.