முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம்


முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் மற்றும் சப்பாணி மாடசாமி கோவில் கொடை விழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழா நாட்களில் விளக்கு பூஜை, பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் ஊர்வலம், அம்மனுக்கு உச்சிகால பூஜை, சாமக் கொடை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணியளவில் திரளான பக்தர்கள் கோவிலை நோக்கி முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோவிலில் முன்பு இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கீழபஜார், தெற்கு ரத வீதி, போலீஸ் நிலைய சாலை, ஆறுமுகம் நகர் வழியாக சென்று ஆம்பல் ஊருணியை வந்தடைந்தது. அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மற்றும் மருத்துவ சமுதாயத்தினர் செய்திருந்தனர்.


Next Story