மூலக்கரை வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா


மூலக்கரை வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
x

மூலக்கரை வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகில் உள்ள மூலக்கரை வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் மங்கள இசையுடன் தொடங்கி, விக்னேஸ்வரா அனுஷ்ஞை, மஹா கணபதி ஹோமம், பிரம்மச்சாரி யாகம் பூஜை, கஜ பூஜை, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாம் நாள் காலையில் யாகசாலை பூஜையும் திருமுறை பாராயணம் நடைபெற்றது. மாலையில் யாகசாலை பூஜை, இரவு 9 மணி அளவில் யந்திர ஸ்தாபனம் நடைபெற்றது.

மூன்றாம் நாள் காலை 6.15 மணிக்கு மேல் 7.15-க்குள் கோவில் விமானம் மற்றும் தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story