சமவெளிப் பகுதியிலும் முள்ளங்கி சாகுபடி செய்யலாம்


சமவெளிப் பகுதியிலும் முள்ளங்கி சாகுபடி செய்யலாம்
x

சமவெளிப் பகுதியிலும் முள்ளங்கி சாகுபடி செய்யலாம்

திருப்பூர்

போடிப்பட்டி,

சமவெளிப் பகுதியிலும் முள்ளங்கி சாகுபடி செய்வதற்கான சூழல் நிலவுவதால் உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெளி மாநில வியாபாரிகள்

உடுமலை பகுதியில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் உடுமலை தினசரி சந்தை காய்கறிகள் மொத்த விற்பனையில் தமிழக அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இங்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகளும் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.ஆனாலும் பல நேரங்களில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் உற்பத்தி அதிகரித்து வரத்து அதிகரிப்பதால் போதிய விலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது.இந்தநிலையில் சீரான விலை கிடைக்கும் வகையிலான குறைந்த சாகுபடிப் பரப்பு கொண்ட காய்கறிகளை தேர்வு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.அந்தவகையில் ஒருசில விவசாயிகளின் தேர்வாக முள்ளங்கி சாகுபடி உள்ளது.

புதிய ரகங்கள்

பொதுவாக குளிர்ந்த மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் முள்ளங்கி, காலிபிளவர், பீட்ரூட் போன்ற மலைக் காய்கறிகள் தற்போது சமவெளிப் பகுதிகளிலும் விளைவிக்கப்படுகின்றன.அவற்றில் சமவெளிப் பகுதிகளுக்கேற்ற வகையில் பல புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அந்தவகையில் உடுமலை பகுதியில் முள்ளங்கி சாகுபடியில் ஒருசில விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'அனைத்து வகையான மண் வகைகளிலும் சாகுபடி செய்யக் கூடியதாக முள்ளங்கி உள்ளது.இதனை சமவெளிப் பகுதிகளில் சாகுபடி செய்வதாக இருந்தாலும் சற்று குளிர்ந்த வானிலையில் சாகுபடி செய்யப்பட்டால் நல்ல மகசூல் தரக் கூடியதாக உள்ளது.அந்தவகையில் உடுமலை பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை முள்ளங்கி சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.விதைத்த 45 நாட்களில் முள்ளங்கி அறுவடைக்குத் தயாராகி விடும்.60 நாட்கள் வரை அறுவடை செய்யலாம்.சரியான பருவத்தில் அறுவடை செய்தால் மட்டுமே முள்ளங்கியை விற்பனை செய்ய முடியும்.ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை மகசூல் பெற முடியும்.ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைப்பதால் முள்ளங்கி சாகுபடி லாபகரமானதாகவே இருக்கும்'என்று விவசாயிகள் கூறினர்.




Next Story