மூலனூரில் ஓய்வூதியர் தினவிழா
திருப்பூர்
மூலனூரில் ஓய்வூதியர் தின விழா மூலனூர் தனியார்திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றிய மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரகுநாதன் வரவேற்றார். வட்டாரத்துணைத் தலைவர் பொன்னையன் ஆண்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். காந்திமதி பொன்னு லட்சுமி மற்றும் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் மற்றும் நிறுத்திவைக்கப்பட்ட அகவையை உடனே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 80 வயதுக்கு நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.
Next Story