முனீஸ்வரர் கோவில் திருவிழா
முனீஸ்வரர் கோவில் திருவிழா நடந்தது
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்விளை மகாகணபதி இணைந்த கண்ணபெருமாள் சாமி, மகாசடை முனீஸ்வரர், மகாசடை முனீஸ்வரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுத்து வருதல், கால்நடல் மற்றும் காப்பு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக பூஜை, அன்னபூஜை, தீபாராதனை, அன்னதானம், திருவிளக்கு மற்றும் 1,008 அகல்விளக்கு பூஜை, அபிஷேக பூஜை, வில்லிசை, ஆனிகால் பாதத்துடன் கோட்டை சுற்றி வருதல், மஞ்சள் நீராடுதல். அக்னி சட்டி ஏந்தி வீதி உலா, அம்மன் வேட்டைக்கு செல்லுதல், சுவாமி அம்மன் அக்னி மலையேறுதல் நடந்தது. 3-ம் நாள் அன்னதானம், சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி உணவு எடுத்தல் போன்றவை நடைபெற்றது.
Related Tags :
Next Story