நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு


நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு ஏற்றார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை நகராட்சி தேர்வு நிலையில் இருந்து, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.. இதனையடுத்து ஏற்கனவே மயிலாடுதுறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த செல்வபாலாஜி பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் கூடுதல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டு மயிலாடுதுறை நகராட்சி (பொறுப்பு) ஆணையராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு புதிய ஆணையராக சங்கர் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் புதிய ஆணையராக சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு கோவை மாநகராட்சி உதவி ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர் சங்கருக்கு நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story