மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்


மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
x

மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்மநாபபுரம் நகராட்சி ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் தாமோதரன், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாநில பொருளாளர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story