கோவில்பட்டியில் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்


கோவில்பட்டியில் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
x

கோவில்பட்டியில் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை கூட்ட அரங்கில் நேற்று கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் கா. கருணாநிதி தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் ராஜாராம், துணைத்தலைவர் ஆர்.எஸ். ரமேஷ் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நகரசபை பகுதியில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை மற்றும் கணவரால் கைவிடப் பட்டோர் உதவி தொகை பெறு வதற்காக, சமுதாய அமைப் பாளரின் குறிப்பின்படி புதிதாக வறுமை கோட்டு பட்டியலில் இணைக்க விண்ணப்பித்த 248 பேருக்கு மன்றத்தின் அனுமதி வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து நடந்த அவசரக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் வைக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டது.


Next Story