நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பழனியில் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு நகராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், பழனி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கிளை தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், துப்புரவு பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி நகராட்சி அலுவலர்கள், பணியாளர்களுக்கு எதிராகவும், அவதூறு பரப்பும் வகையிலும் போஸ்டர்கள் ஒட்டியதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நகராட்சி பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கை தொடர்பாக, நகராட்சி ஆணையர் கமலாவிடம் அவர்கள் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story