பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கங்கைகொண்டானில் பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்
மந்தாரக்குப்பம்
மந்தாரக்குப்பம் அருகே கங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
குடிநீர் திட்டம், தெரு விளக்கு பராமரிப்பு மற்றும் தூய்மை பணி ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும், 20 ஆண்டுகளாக விபத்து இன்றி வாகனங்கள் ஓட்டிய பேரூராட்சி டிரைவர்களுக்கு தங்க பதக்கம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story