தலைஞாயிறு பகுதி ஓட்டல்களில் பேரூராட்சி செயல் அலுவலர் 'திடீர்' ஆய்வு


தலைஞாயிறு பகுதி ஓட்டல்களில் பேரூராட்சி செயல் அலுவலர் திடீர் ஆய்வு
x

தலைஞாயிறு பகுதி ஓட்டல்களில் பேரூராட்சி செயல் அலுவலர் ‘திடீர்’ ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல் அலுவலர் குகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும். சூடான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். ஓட்டல்களை தூய்மையாக பராமரிக்க தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். காலரா முன்னெச்சரிக்கை குறித்து செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பொதுமக்கள் திறந்த வெளியை கழிவறைபோல் பயன்படுத்தக்கூடாது. காய்ச்சிய குடிநீர் மட்டுமே குடிக்க வேண்டும். வயிற்று வலி, வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்' என்றார்.


Next Story