நகராட்சி சுகாதார பெண் பணியாளர் தர்ணா
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி சுகாதார பெண் பணியாளர் தர்ணா போராட்டம்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாடார் காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மனைவி நந்தினி (வயது 34). இவர் வாணியம்பாடி நகராட்சியில் தற்காலிக சுகாதார பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி அவர் மீது புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு நந்தினி மற்றும் பிரேமாவை அழைத்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு நந்தினி மற்றும் பிரேமா அவரது குடும்பத்தினர் தடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்களது புகார் குறித்து விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் நகராட்சி ஆணையாளர் விசாரணைக்கு வரவில்லை. பாலியல் தொந்தரவு கொடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறினர்.
Related Tags :
Next Story