கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தராததால் நகராட்சி கூட்டம் பாதியில் ஒத்திவைப்பு
கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தராததால் குளச்சல் நகராட்சி கூட்டம் பாதியில் ஒத்தி வைக்கப்படுகிறது என கூறியபடி தலைவர் நசீர் அங்கிருந்து வெளியேறினார்.
குளச்சல்:
கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தராததால் குளச்சல் நகராட்சி கூட்டம் பாதியில் ஒத்தி வைக்கப்படுகிறது என கூறியபடி தலைவர் நசீர் அங்கிருந்து வெளியேறினார்.
நகராட்சி கூட்டம்
குளச்சல் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் விஜயகுமார், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், பொறியாளர் ஜீவா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
பாதியில் ஒத்தி வைப்பு
கூட்டம் தொடங்கியதும் தலைவர் நசீர் பேச தொடங்கினார்.
ஜாண் பிரிட்டோ (தி.மு.க):- கூட்டத்தை நடத்த விட மாட்டோம். தலைவருக்கு மெஜாரிட்டி இல்லை. ஆதலால் நீங்கள் பதவி விலகுங்கள்.
தலைவர்:- நான் பதவி விலகுவது பற்றி நீங்கள் கூற வேண்டாம்.
ரகீம் (தி.மு.க.)்:- கணினி பிரிவில் வேலை பார்த்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இடம் மாற்றம் செய்யப்பட்டு 3 மாதமாகிறது. இதனால் 3 மாதமாக நகராட்சி கணினி சம்பந்தமான வேலைகள் நடக்கவில்லை. தலைவர்:- ஊழியர்கள் இடமாற்றம் செய்வது நிர்வாக வசதிக்காகத் தான்.
ரகீம்:- இல்லை. அவரை களங்கப்படுத்தி இட மாற்றம் செய்துள்ளீர்கள். இதற்கு பதில் கூறி விட்டு கூட்டம் நடத்தலாம் என்றார். உடனே தலைவர் நசீர் குறுக்கிட்டு, கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என கூறியபடி அங்கிருந்து வெளியேறினார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.