நகராட்சி அலுவலர்கள் திடீர் பணியிட மாற்றம்
மாவட்டத்தில் நகராட்சி அலுவலர்களை திடீர் பணியிட மாற்றம் செய்து நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் நகராட்சி அலுவலர்களை திடீர் பணியிட மாற்றம் செய்து நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம்
மாநிலம் முழுவதும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா நகராட்சிகளில் பணியாற்றும் 107 இளநிலை உதவியாளர்களையும், 87 வருவாய் உதவியாளர்களையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் விருதுநகர் நகராட்சியில் மட்டும் 8 இளநிலை உதவியாளர்களும், 4 வருவாய் உதவியாளர்களும் பல்வேறு நகராட்சிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- இளநிலை உதவியாளர்கள் சங்கரநாராயணன், பவானி, அருண் பிரசாத், தமிழ்செல்வன், சாகுல் ஹமீது, மாரியப்பன், காளீஸ்வரன், அபிநயா, வருவாய் உதவியாளர்கள் கபீர் ராஜன், பியூலா தங்கமணி, முனீஸ்வரன், கருப்பசாமி.
ஸ்ரீவில்லிபுத்தூர்
அதேபோல ராஜபாளையம் நகராட்சியில் இளநிலை உதவியாளர்கள் செல்லையா, சாந்தி, சுபபுலட்சுமி சதீஷ்குமார், ஆண்டாள், அனிதா ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
வருவாய் உதவியாளர் முத்துராமலிங்கமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வருவாய் உதவியாளர்கள் ஆதிச்செல்வி, வாழவந்தான், மணிகண்டன், சுப்புராஜ், சீதாலட்சுமி, மகேஸ்வரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தூர் நகராட்சியில் இளநிலை உதவியாளர்கள் வினோத் கண்ணா, பரமேஸ்வரன், மீனாட்சிசுந்தரம், வருவாய் உதவியாளர் நாகராஜ் ஆகியோரும், சிவகாசி மாநகராட்சியில் வருவாய் உதவியாளர் சிவபாக்கியமும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.