கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை


கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை
x

வாணியம்பாடியில் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், வாணியம்பாடியில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் செந்தில்குமார், சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பஜார் வீதி, முகமது அலி பஜார், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர். மேலும் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், காலாவதியான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து மீண்டும் இவற்றை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story