நகராட்சி சாதாரண கூட்டம்
சீர்காழி நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுப்பராயன், ஆணையர் வாசுதேவன், மேலாளர் காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜ கணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைத்து உறுப்பினர்களும் பேசுகையில் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மே 24-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பொது விடுமுறை விட நடவடிக்கை எடுக்க வேண்டும் , நான்கு வீதிகளிலும் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றி சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக புதிதாக கை பம்புகள் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் நன்றி கூறினார்.