வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சி தலைவர் ஆய்வு
திட்டச்சேரியில் வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு வெள்ளத்திடலில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பொது சமுதாய கழிப்பிடம் கட்டும் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து வெள்ளத்திடலில் சேதமடைந்த சமுதாயக்கூடம் இடிக்கும் பணியையும், 15-வது வார்டு பகுதியில் வீடுகளில் புதிதாக கழிவறைகள் கட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி உறுப்பினர் மேகலா பரமசிவம், அலுவலர் அமானுல்லா மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story