மாநகராட்சி பள்ளி மாணவி சாதனை
மாநகராட்சி பள்ளி மாணவி சாதனை படைத்தார்
திருச்சி
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தையொட்டி, திருச்சி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி சாய்னா சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி சாய்னா கை விரல்களில் தம் வைத்து 7 மீட்டர் அளவில் பெண்கள் பாதுகாப்பு எண்ணான 181-ஐ உருவாக்கினார். மேலும் போலீசை அழைக்க உதவும் எண்ணான 100, தாய் மொழியின் முதல் எழுத்தான அ மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணான 1098 ஆகியவற்றை ஒரு மணி நேரத்தில் தனது கை பெருவிரல் மூலம் மையால் உருவாக்கி புதிய சாதனை படைத்தார். இவரது இந்த சாதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ், நேஷனல் ரெக்கார்ட்ஸ், ஆசிய பசிபிக் சாதனை ஆகிய புத்தகங்களில் இடம் பெற உள்ளது. இவர் ஏற்கனவே 20 முறை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story