தேசிய, மாநில அளவில் சாதனை படைத்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள் - மேயர் இந்திராணி பாராட்டு


தேசிய, மாநில அளவில் சாதனை படைத்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்  - மேயர் இந்திராணி பாராட்டு
x

தேசிய மற்றும் மாநில அளவில் சாதனை படைத்த மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் இந்திராணி பாராட்டு தெரிவித்தார்.

மதுரை


தேசிய மற்றும் மாநில அளவில் சாதனை படைத்த மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் இந்திராணி பாராட்டு தெரிவித்தார்.

வெண்கல பதக்கம்

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மதுரைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக, மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோர் சாதனை மாணவர்களை அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

அதன்படி மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி எம்.மாரிச்செல்வி, தேசிய அளவில் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் நடைபெற்ற 17-வது இளையோர் தேசிய தடகள போட்டியில் தொடர் ஓட்டம் 200 மீட்டர் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார். தொடர்ந்து அவர் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நடந்த 37-வது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன் போட்டியில் தொடர் ஓட்டம் 400 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு தொடர் ஓட்டம் 400 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

திறனாய்வு தேர்வு

மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் சுந்தராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் எம்.சரவணபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அபிஜீத்ராஜ், சுருதிகா, தனிஷா, சாதனா, மோனிஷா, பாலமணிகண்டன், கவுஷிகா, சாம்ரீன்ஜமீலா, தனிஷா, பாண்டிச்செல்வி ஆகிய 10 மாணவ-மாணவிகள் பெற்றி பெற்று உள்ளனர்.

இந்த சாதனை மாணவர்களை மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோர் நேற்று மாநகராட்சி அண்ணா மாளிகைக்கு அழைத்து சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியின் போது கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story