நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்


நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்
x

திருப்பத்தூர் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் நகர பஸ் நிலையம் அருகே உள்ள ஷெரிப் ஓட்டல் மாடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் ஜி.ரங்கநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் டி.பாண்டியன் வரவேற்றார். கவுரவத் தலைவர் பாலாஜி பிரசாத் முன்னிலை வகித்தார். செயலாளர் டி.கே.மோகன் கலந்து கொண்டு திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகராட்சி கடைகளுக்கு வாகனம் நிறுத்துமிடம், கழிப்பிடம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.

துணைத் தலைவர் டி.ராஜா, நகர மன்ற உறுப்பினரும், துணைச் செயலாளருமான பி.அசோகன், இணைச் செயலாளர் டி.ஆர்.ஜுபேர் அஹமத், துணை செயலாளர்கள் சிவகுமார், பாஸ்கர் உள்பட பலர் பேசினார்கள். நூற்றுக்கும்் மேற்பட்ட நகராட்சி கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் அமானுல்லா நன்றி கூறினார். பின்னர் டி.கே.மோகன் கூறுகையில் நகராட்சி கடைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடம், கழிப்பிடம் பழுது பார்த்தல் போன்றவை செய்ய மனு அளித்துள்ளோம். கொரோனா இரண்டாவது அலையின்போது கடைகள் மூடப்பட்டது குறித்து தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அளித்ததன் பேரில் 3 மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.


Next Story