முனியப்பசாமி கோவிலில் ஆடி பொங்கல் விழா
அவினாசி வாணியர் வீதியில் பழமைவாய்ந்த முனியப்பசாமி கோவில் மற்றும் ஆதிபராசக்தி கோவில்கள் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், தங்களது அனைத்து காரியங்களும் வெற்றிபெறவும், வியாபாரம் செம்மையாக நடைபெறவும், முனியப்பசாமி மற்றும் ஆதிபராசக்தியை வேண்டி சாமி தரிசனம் செய்து செய்வது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் ஆடி பொங்கல் விழா கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமம் நந்தா தீபம் ஏற்றுதலுடன் தொடங்கியது. 9-ந் தேதி தீப வழிபாடும் 10-ந்தேதி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் இருந்து திரளான பெண்கள் தீர்த்த குடம், மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து முனியப்பசாமிக்கு மகா அபிஷேகம், மலர் அலங்காரம், வழிபாடுகள் ஆகியவை நடந்தது. இதில் அவினாசியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.