முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம்
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் மற்றும் ஸ்ரீகல்லகநாடி அம்மன் கோவில் தை திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலையில் சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் வீதிஉலா வருதல் நடந்தது.
சிகர நிகழ்ச்சியான 9-ம் நாளான நேற்று மதியம் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர். புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜய்குமார், புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.