நண்பரை குத்திக்கொன்று விட்டுவாலிபர் தற்கொலை


நண்பரை குத்திக்கொன்று விட்டுவாலிபர் தற்கொலை
x
திருப்பூர்


திருப்பூரில் லாட்ஜில் தங்கியிருந்த நண்பரை குத்திக்கொலை செய்து விட்டு வாலிபரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

லாட்ஜில் அழுகிய நிலையில் பிணம்

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 7-ந் தேதி இரவு ஒரு அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அறை கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அறைக்குள் கழிப்பிடத்தில் அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி திருப்பூர் தெற்கு போலீசார் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்கள் இருந்தன. சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.

லாட்ஜில் அறை எடுத்தவரின் முகவரியை விசாரித்தபோது கரூர் கடவூரை சேர்ந்த கதிரேசன் (வயது 24) என்பவர் வாடகைக்கு அறை எடுத்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கதிரேசனின் உறவினரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர் கடந்த 4-ந் தேதியே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

குத்திக்கொலை

போலீசாரின் தொடர் விசாரணையில், கதிரேசனும், அதே பகுதியை சேர்ந்த வினோத்குமாரும் (25) கல்லூரி நண்பர்கள். இவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக லாட்ஜில் அறை எடுத்து தங்கிவந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வினோத்குமாரை, கதிரேசன் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கடந்த 4-ந் தேதி சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்ததும் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நண்பரை கொலை செய்த வாலிபரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

----


Next Story