மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு சரண் அடைந்த விவசாயி


மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு  சரண் அடைந்த விவசாயி
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மண் வெட்டியால் அடித்து பெண்ணை கொன்றுவிட்டு அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

சிவகங்கை

தேவகோட்டை,

மண் வெட்டியால் அடித்து பெண்ணை கொன்றுவிட்டு அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

குடும்ப தகராறு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இரவியமங்களம் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் தனபால் (வயது 42). விவசாயி. இவருடைய மனைவி சினேகவள்ளி(40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சினேகவள்ளி தனது மகள்களுடன் பண்ணவயலில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து வசித்து வந்தார்.

3 மாதங்களுக்கு முன்புதான் கணவன், மனைவி மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினர். நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அடித்துக்கொலை

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த தனபால் வீட்டில் இருந்த மண்வெட்டி கணையால் சினேகவள்ளியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சினேகவள்ளி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தனபால், திருவேகம்பத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கொன்றதை கூறி சரண் அடைந்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story