தர்மபுரியில் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் பார்த்தசாரதி. இவர் நெசவாளர் காலனி பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்களை பார்த்தசாரதி தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் பார்த்தசாரதியை தரக்குறைவாக பேசி, அவருடைய சீருடையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கீழ் மாட்டுக்காரனூரை சேர்ந்த தனசேகரன் (வயது 24), அப்பு (25) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story