மகேந்திரமங்கலம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


மகேந்திரமங்கலம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 3:11 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (42). குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குமார் மதுக்குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை கஸ்தூரி தட்டிக்கேட்டதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார் அங்கிருந்த அரிவாளை தூக்கி கஸ்தூரி மீது வீசினார். இதில் அவருடைய தலையில் வெட்டு விழுந்தது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story