வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அம்மாப்பேட்ைட அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூர்
அம்மாப்பேட்டை;
அம்மாப்பேட்டை அருகே ஆலங்குடி ஊராட்சி, கொத்தட்டை கிராமம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகையன் மகன் அழகேசன் (வயது 27). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்தவத்சலம் மகன் அய்யனார் ( 23) என்பவருக்கும் இடையே வீட்டின் எல்லை பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அழகேசன் வேலி கட்டுவதற்கு தனது கொல்லைப்புறத்தின் எல்லையில் நட்டு வைத்திருந்த கருங்கல்லை அய்யனார் பிடுங்கி எறிந்து விட்டு அழகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார். இது குறித்து அழகேசன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story