நிலக்கோட்டை அருகே மதுபோதையில் கொல்ல வந்த மகனை குத்திக்கொன்ற ஜோதிடர்


நிலக்கோட்டை அருகே மதுபோதையில் கொல்ல வந்த மகனை குத்திக்கொன்ற ஜோதிடர்
x

நிலக்கோட்டை அருகே மதுபோதையில் கொல்ல வந்த மகனை கத்தியால் குத்தி ஜோதிடர் கொலை செய்தார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே மதுபோதையில் கொல்ல வந்த மகனை கத்தியால் குத்தி ஜோதிடர் கொலை செய்தார்.

மது அருந்தி தகராறு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள என். புதுப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 55). ஜோதிடர். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 6 மகன்கள், 4 மகள்கள். இதில் 7-வது மகன் அஜீத் என்ற ராஜ் (22). அவரும் ஜோதிடம் பார்த்து வந்தார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அஜீத் மது அருந்தி வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் வீட்டில் அந்தோணி மட்டும் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அஜீத் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அங்கு படுத்திருந்த தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை அந்தோணி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை என தெரிகிறது.

கத்தியால் குத்திக்கொலை

மது போதை அதிகமாக இருந்ததால் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை என்றுகூட பார்க்காமல் குத்தினார். அவருடைய தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்தோணி அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டார். அந்தோணியால் மகனுடன் போராட முடியவில்லை. இதனால் கத்தியை பிடுங்கி அஜீத்தின் வயிற்றில் அந்தோணி குத்தினார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அஜீத் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணியை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கு இறந்த கிடந்த அஜீ்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். தந்தையே மகனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story