கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்
கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 67). இவர் கடந்த 22-ம் தேதி தனது தோட்டத்தில் இருக்கும் போது அரிவாளால் வெட்டி கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக 2 வாலிபர்களை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
நேற்று அமைச்சர் கீதா ஜீவன் தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் வீட்டிற்கு சென்று அவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் மனைவி பொன்னுத்தாய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அமைச்சருடன் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றார்கள்.
Related Tags :
Next Story