வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்
வழக்கு விசாரணைக்காக வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் ஜெயிலில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து பழங்களை உட்கொண்டு வருகிறார்.
இன்று 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். அவரின் உடல்நிலையை சிறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் அவர் மீது உள்ள ஒரு குற்ற வழக்கு குறித்த விசாரணை வேலூர் கோட்டில் நடந்தது.
இதற்காக வேலூர் ஜெயிலில் இருந்து பலத்த காவலுடன் முருகன் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்
வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து மீண்டும் அவரை வேலூர் ஜெயிலுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.