32-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
பரோல் வழங்கக்கோரி 32-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரி கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி ஜெயில் அதிகாரிகள் பலமுறை நடத்திய பேச்சுவார்த்தையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
ஜெயிலில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து பழங்களை மட்டுமே உட்கொண்டு வருகிறார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகன் 20 கிலோ எடை குறைந்துள்ளார். இந்த நிலையில் 32-வது நாளாக அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
அவரிடம் ஜெயில் அதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முருகனின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள், காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story